MARC காட்சி

Back
திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a கண்டன ஷேத்ரம், பஞ்சகமல ஷேத்ரம்
520 : _ _ |a சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்திதலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு பிரம்மா மற்றும் ஸரஸ்வதி சிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இத்தலம் ஸ்ரீரங்கத்தைவிட மிகவும் தொன்மைவாய்ந்தது. இத்தலத்தின் முதல் பெருமாள் ஸ்ரீசந்தானகோபால கிருஷ்ணனும், நவநீத கிருஷ்ணனும் ஆவார்கள். பல சதுர்யுகங்களுக்கு முன்னால் உண்டானது இந்த திவ்ய ஷேத்ரம். ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர். திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத்தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன்மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார். சேக்கிழாரின் பெரியபுராணமும், கந்தபுராணமும் பிரம்மனின் மண்டையோடு சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டதைப் பற்றிப் பேசுகின்றன. மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார் எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், திருமங்கையாழ்வார், சோழநாட்டுத் திருத்தலம், திருவையாறு, தஞ்சாவூர், திருக்கண்டியூர், ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில், கண்டன சேத்திரம், கபால தீர்த்தம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 9344608150
905 : _ _ |a கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 10.8514593
915 : _ _ |a 79.1068667
916 : _ _ |a ஹரசாப விமோசனப் பெருமாள், கமலநாதன்
917 : _ _ |a ஹரசாப விமோசனப் பெருமாள், கமலநாதன்
918 : _ _ |a கமலவல்லி நாச்சியார்
923 : _ _ |a கபால மோட்ச புஷ்கரிணி, ஹத்யா விமோசன தீர்த்தம், பத்ம தீர்த்தம் (பலி தீர்த்தம்)
924 : _ _ |a வைகானச ஆகமம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a பங்குனியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் அழகிலும், அருளிலும் பொலிவுற்று திகழ்பவை.
930 : _ _ |a இத்தலத்தைப் பற்றி பிரமாண்ட புராணத்தின் 8-வது அத்தியாயத்தில் பேசப்படுகிறது. சிவபெருமானுக்கும் பிரம்மனுக்கும் 5 தலைகள் இருந்ததாகவும் ஒரு சமயம் நிஷ்டையில் அமர்ந்து விழித்த பார்வதி தேவி, அவ்விடம் வந்து கொண்டிருந்த பிரம்ம தேவருக்கு (தன் பர்த்தாவோ என்று எண்ணி) பணிவிடை செய்து பாதங்களை அலம்ப, பெருந்தன்மையோடு பிரம்மன் அதனையேற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தனக்கீடாக ஐந்து தலைகள் இருப்பதால் தான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதுடன், தனக்கு ஐந்து தலையென்று பிரம்மனும் கர்வத்தில் மிதக்கிறான் என்று நினைத்த சிவன் பிரம்மனின் நடுத்தலையைக் கிள்ளியெறிய எத்தனிக்க பிரம்மனின் மண்டையோடு சிவனின் உள்ளங்கையில் பதிந்து நகராமல் அழுந்திக் கொண்டது. இதனால் பிரம்மஹத்தி தோஷம் தன்னைச் சூழ, அதிலிருந்து மீள்வதற்கு சிவபெருமான் தீர்த்தயாத்திரை செய்து பூவுலகெங்கும் அலைய, யார் பிச்சையிட்டாலும் கபாலம் நிறையாமல் போட்டவுடன் மாயமாய் மறைய திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவிலில், மஹாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க மஹாலெட்சுமி (பூர்ணவல்லி தாயார்) பிரம்ம கபாலத்தில் பிச்சையிட்டதும் அது நிறைந்து சிவனின் பசித்துயர் ஓய்ந்தது. பாத்திரம் (கபாலம்) நிறைந்து பசித்துயர் ஓய்ந்தபோதும் மண்டையோடு மட்டும் கையைவிட்டு நீங்காமலிருக்கவே அவ்விடத்திலிருந்தே திருமாலை நினைத்து சிவன் வழிபட, அப்போது திருமால் சிவபெருமானைக் கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி அங்கே எழுந்தருளியுள்ள கமலவல்லி நாச்சியாரையும், என்னையும் வழி பட்டால் கபாலம் கையைவிட்டு அகலும் என்று சொல்ல, அவ்வண்ணமே கண்டியூர் வந்து தீர்த்தத்தில் நீராடி எழுந்ததும் கபாலமகன்றது. இவ்வாறு அரன் சாபம் தீர்த்ததால் ஹரசாப விமோசனப் பெருமாள் என்றே இங்கு திருமாலுக்கும் பெயருண்டாயிற்றென்பது வரலாறு. சில நாட்கள் இங்குள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியதாகவும், சற்றே மாறுபட்ட தொனியிலும் இக்கதை பேசப்படுகிறது. சிவனுக்கு கண்டீச்சுவரர் என்று ஒரு பெயர் இருப்பதால் அவர் சாபந்தீர்ந்த நினைவாக கண்டியூர் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது.
932 : _ _ |a இக்கோயில் கருவறை விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. கண்டன ஷேத்ரமென்றும், பஞ்சகமல ஷேத்ரமென்றும் அழைக்கப்படும் இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. அதாவது கமலா ஷேத்ரம், கமலா புஷ்கரணி, கமல விமானம், கமலநாதன், கமலவல்லி நாச்சியார் என ஐந்து.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீசுவரர் கோயில், திருவேள்விக்குடி சிவன் கோயில், திருச்சோற்றுத்துறை நாதர் கோயில்
935 : _ _ |a இத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் 6 வது மைலில் உள்ளது.
936 : _ _ |a காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருக்கண்டியூர்
938 : _ _ |a தஞ்சாவூர்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a தஞ்சாவூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000230
barcode : TVA_TEM_000230
book category : வைணவம்
cover images TVA_TEM_000230/TVA_TEM_000230_திருக்கண்டியூர்_ஹரசாபவிமோசனப்பெருமாள்-கோயில்-0002.jpg :
Primary File :

cg103v018.mp4

TVA_TEM_000230/TVA_TEM_000230_திருக்கண்டியூர்_ஹரசாபவிமோசனப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000230/TVA_TEM_000230_திருக்கண்டியூர்_ஹரசாபவிமோசனப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000230/TVA_TEM_000230_திருக்கண்டியூர்_ஹரசாபவிமோசனப்பெருமாள்-கோயில்-0003.jpg